--- --:--:-- --

எட்டு மாதங்களுக்கு பின்பு பிறகு கூண்டிலிருந்து ” விடுதலை ” ஆன அரிசி ராஜா யானை !!!

15.3

கோவை மாவட்டம் வெள்ளலூர் அருகே கடந்த 2017ஆம் ஆண்டு ஜூன் 2 ஆம் தேதி காட்டு யானை ஒன்று நான்கு பேரை மிதித்துக் கொன்றது.சம்பவம் குறித்து அறிந்து விரைந்து வந்த வனத்துறையினரால் மயக்க ஊசி போட்டு அந்த யானையை நீண்ட போராட்டங்களுக்கு பின்னர் பிடிக்கப்பட்டது. காட்டு யானை தாக்குதலில் மூன்று பேர் படுகாயமடைந்தனர்.

 

அதனையடுத்து கடந்த ஜூன் 3ஆம் தேதி பிடிபட்ட காட்டு யானை வரகழியாறு வனப்பகுதியில் விடப்பட்டது.அதனை தொடர்ந்து கடந்தாண்டு மே 25ஆம் தேதி அர்த்தநாரிபாளையம்,நவமலை சுற்றுவட்டாரப்பகுதிகளில் விளைநிலங்களை நாசப்படுத்திய யானை அப்பகுதியில் வசிக்கும் 7 வயது சிறுமியை மிதித்து கொன்றது.அதே யானை மே 26ஆம் தேதி முதியவரை கொன்றது.

 

இதனையடுத்து வனத்துறையினர் சுயம்பு,பரணி என்ற கும்கி யானைகளின் உதவியுடன் காட்டு யானையை பிடிக்கும் முயற்சியில் மே 29ஆம் தேதி முதல் ஈடுபட்டனர். இந்த நிலையில் கடந்தாண்டு நவம்பர் 9ஆம் தேதி அர்த்தநாரிபாளையத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்ற விவசாயியை கொன்றது.

 

மேலும்,அந்த யானை அரிசியை விரும்பி தின்பதால் அரிசி ராஜா எனவும் அழைப்பட்டது. அதனையடுத்து யானையை பிடிக்கும் பணியை தீவிரப்படுத்திய வனத்துறையினர் யானைப் பிடிக்கும் பணியில் ஈடுபட்டு நவம்பர் 14ஆம் தேதி நள்ளிரவு காட்டுயானை பிடித்தனர்.

 

பிடிக்கப்பட்ட காட்டுயானை பொள்ளாச்சி டாப் சிலிபில் உள்ள வரகழியாறு பகுதியில் மரக்கூண்டில் அடைக்கப்பட்டு கவனிக்கப்பட்டுவந்தது.

 

எட்டு மாதங்களாக கூண்டிலிருந்த அரிசி ராஜா யானைக்கு பாகன்கள் கட்டளைக்கு அடிபணிந்து உணவு உட்கொள்ளுதல், கட்டுப்படுதல் உள்ளிட்டப் பயிற்சிகள் அளித்துவந்தனர்.இந்த நிலையில் அரிசி ராஜா யானைக்கு வனத்துறை சார்பில் முத்து என பெயர் சூட்டப்பட்டுள்ளது. தற்போது நல்ல ஆரோக்கிய நிலையில் உள்ளதாகவும், மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும்,பாகன்கள் சிறந்த முறையில் பயிற்ச்சி அளித்துள்ளதாகவும்,வரும் ஜூலை 12ஆம் தேதி யானைகள் தின விழாவில் சின்னதம்பியுடன், அரிசி ராஜா (எ)முத்துவும் பங்கேற்பான் எனவும் தெரிவித்துள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon