--- --:--:-- --

கல்லூரிகளில் ஆகஸ்ட் 3-ம் தேதி முதல் ஆன்லைன் வகுப்புகள் தொடக்கம்..!

12

சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் கல்லூரிகளில் ஆகஸ்ட் 3ஆம் தேதி முதல் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இதுகுறித்து சென்னை பல்கலைக்கழகத்தில் இணைப்பு பெற்ற அனைத்து கல்லூரி முதல்வர்களுக்கும் பதிவாளர் சீனிவாசன் அனுப்பியுள்ள கடிதத்தில் இளங்கலை முதுகலையில் முதலாமாண்டு தவிர மற்ற மாணவர்களுக்கு ஆகஸ்ட் 3ஆம் தேதி ஆன்லைன் வகுப்புகள் தொடங்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

 

இளங்கலை படிப்புக்கான மாணவர் சேர்க்கையை செப்டம்பர் 10ஆம் தேதிக்குள் முடிக்குமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார். மாணவர் சேர்க்கை குறித்து உயர் கல்வித்துறை அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியிடாத நிலையில் சென்னை பல்கலைக்கழக பதிவாளர் தன்னிச்சையாக மாணவர் சேர்க்கை குறித்து உத்தரவிட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon