ரேசனில் அடுத்த மாதம் முதல் இலவச பொருட்கள் கிடையாது,,! தமிழக அரசு அறிவிப்பு!!
கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 4 மாதங்களாக ரேசனில் வழங்கப்படும் அனைத்து பொருட்களும் இலவசமாக வழங்கப்பட்ட நிலையில் அடுத்த மாதம் (டையாது என தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கையாக கடந்த மார்ச் 24-ந் தேதி நள்ளிரவு முதல் ஊரடங்கு அமலுக்கு வந்தது, இதனால் வேலை, வருமானம் இழந்து பெரும்பாலான குடும்பத்தினர் பரிதவிப்புக்கு ஆளாகினர். இதனால் குடும்பத்திற்கு தலா ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கிய தமிழக அரசு,ஏப்ரல், மே, ஜூன், ஜூலை மாதங்களில் ரேசனில் பொருட்களை இலவசமாக வழங்கியது. வழக்கமான இலவச அரிசியுடன் சர்க்கரை, எண்ணெய் , பருப்பு ஆகியவை இலவசமாக வழங்கப்பட்டது.
இந்நிலையில், ரேஷன் கடைகளில் இனி இலவசப் பொருட்கள் கிடையாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
அடுத்த மாதம் (ஆகஸ்ட்) முதல் அத்தியாவசிய பொருட்களை பணம் கொடுத்துத் தான் பெற வேண்டும் எனவும்,ஆகஸ்ட் மாத பொருட்கள் வாங்குவதற்கான டோக்கன் ஆகஸ்ட் 1,3,4 தேதிகளில் வீடுகளுக்கே சென்று வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.






