நடிகைகள் நயன்தாரா, ரம்யா கிருஷ்ணன் போன்ற பிரபலங்களுக்கு மோசடியாக நிலம் விற்பனை..!
கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரின் மனைவி, நடிகைகள் நயன்தாரா, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பிரபலங்களுக்கு ஹைதராபாத்தில் ஏரி நீர் பிடிப்பு நிலத்தை பல கோடிக்கு விற்பனை செய்ததாக ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் மீது புகார் எழுந்துள்ளது.
ஹைதராபாத்தை சேர்ந்த கோட்டா ரெட்டி என்பவரின் ஸ்ரீ ஆதித்ய ஹோம்ஸ் என்ற ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் அவருடைய உறவினர் சுதிர் ரெட்டி இயக்குனராக பதவி வகித்த நிலையில் இருவருக்கும் இடையே குடும்ப பிரச்சினையால் பகை ஏற்பட்டு உள்ளது.
ஹைதராபாத் அருகே ராவுரியலா கிராமத்தில் உள்ள ஏரி முழுமையாக நிரம்பும்போது நீர் நிரப்பக்கூடிய பகுதியில் விவசாயிகளிடமிருந்து ஏக்கர் 5 லட்சம் ரூபாய் என்ற விலையில் நிலத்தை வாங்கி அதை ஒரு ஏக்கர் ஒரு கோடி ரூபாய் என கோட்டா ரியல் எஸ்டேட் நிறுவனம் விற்பனை செய்வதாக சுதிர் ரெட்டி புகார் கூறியுள்ளார்.






