--- --:--:-- --

தற்கொலை முயற்சி செய்த நடிகை விஜயலக்ஷ்மியிடம் மாஜிஸ்த்ரேட் விசாரணை..!

8.1

ரத்த அழுத்த மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயற்சித்த நடிகை விஜயலட்சுமியிடம் விரைவு நீதிமன்ற மாஜிஸ்திரேட் நேரில் சென்று விசாரணை நடத்தியுள்ளார். ஃபிரண்ட்ஸ், பாஸ் என்கிற பாஸ்கரன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள விஜயலட்சுமி நேற்று திடீரென தற்கொலை செய்து கொள்ளப் போவதாக கூறி சமூக வலைதளங்களில் உருக்கமான வீடியோ ஒன்றை வெளியிட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

 

இதையடுத்து ரத்த உயர் அழுத்த மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயற்சித்த விஜயலட்சுமியை மீட்ட நடிகை காயத்ரி ரகுராம் சென்னை அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

 

இந்நிலையில் விரைவு நீதிமன்ற மாஜிஸ்ட்ரேட் வெங்கடேசன் மருத்துவமனைக்கு சென்று விஜயலட்சுமியிடம் விசாரணை நடத்தியுள்ளார். அப்போது தற்கொலைக்கு முயற்சித்தது குறித்து விஜயலட்சுமி அளித்த வாக்குமூலத்தை மாஜிஸ்திரேட் பதிவு செய்து கொண்டார்.

 

அவர் அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் போலீசார் அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர். தமக்கு தொடர்ச்சியாக கொலை மிரட்டல்கள் வருவதாகவும் இது குறித்து புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று விஜயலட்சுமி வெளியிட்ட வீடியோவில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Right Menu Icon