--- --:--:-- --

பாலிவுட்டில் ஏ‌ஆர் ரகுமானுக்கு எதிராக செயல்படும் கூட்டம்..!

1

பாலிவுட் திரையுலகில் தனக்கு எதிராக வதந்தி பரப்பும் வகையில் ஒரு கூட்டமே செயல்படுவதாக இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் தெரிவித்துள்ளார்.

 

அவர் அளித்துள்ள பேட்டியில் தமிழில் எக்கச்சக்கமான திரைப்படங்களோடு ஒப்பிடுகையில் குறைந்த ஹிந்தி படங்களுக்கு மட்டுமே இசையமைத்து உள்ளதாகவும், இதுகுறித்து பலமுறை தான் யோசித்து இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார் .

 

மேலும், சமீபத்தில் தில் பச்செரோ பட இயக்குனர் முகேஷ் சாப்ரா தன்னை சந்திக்கும் போது தன்னோடு பணியாற்ற வேண்டாம் என ஹிந்தி கலைஞர்கள் சிலர் நிர்பந்திப்பது தெரியவந்ததாகவும் ஏ ஆர் ரகுமான் கூறியுள்ளார். அதுமட்டுமின்றி தன்னுடன் சென்றால் இசையமைப்பு பணிகள் தாமதமாகும் என தவறான செய்தியை ஒரு கூட்டம் தொடர்ந்து பரப்பி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Right Menu Icon