--- --:--:-- --

ம.பி.முதல்வர் செளகானுக்கு கொரோனா…! வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டதாக “டுவீட்”!!

34

மத்தியப் பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் செளகானுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனை அவரே டுவிட்டரில் பதிவிட்டுள்ளதுடன் தம்முடன் தொடர்பில் இருந்த அனைவரும் உடனடியாக கொரோனா சோதனை மேற்கொள்ளுமாறும் வலியுறுத்தியுள்ளார்.

 

மத்தியப் பிரதேச முதல்வராக பாஜகவைச் சேர்ந்த மூத்த தலைவர் சிவ்ராஜ் சிங் சௌகான் இருந்து வருகிறார். ம.பி. ஆளுநராக இருந்து வந்த லால்ஜி தாண்டன் கடந்த 21-ந் தேதி உ.பி.மாநிலம் லக்னோவில் காலமானதால், இறுதிச் சடங்கில் பங்கேற்க முதல்வர் செளகான் தனி விமானத்தில் சென்நிருந்தார். அவருடன் பயணித்த அம்மாநில அமைச்சர் ஒருவருக்கு கடந்த 22-ந் தேதி கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் தொற்று உறுதியானது. இதனால் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதையடுத்து முதல்வர் செளகானுக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

 

இந்நிலையில் முதல்வர் செளகான் தனது டுவிட்டர் பக்கத்தில், தமக்கும் கொரோனா தொற்று பாதிப்பு லேசான அறிகுறியுடன் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இதனால் தம்மை தனிமைப்படுத்தி கொண்டுள்ளதாக தெரிவித்துள்ள செளகான், தம்முடன் நெருங்கிய தொடர்பில் இருந்த அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், கடந்த சில நாட்களில் தம்மை சந்தித்தவர்களும் உடனடியாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ளுமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 

Leave a Reply

Right Menu Icon