--- --:--:-- --

பெண்ணின் கருப்பைக்கு வெளியே வளர்ந்த கரு..!

12

சென்னை எழும்பூர் தாய், சேய் நல மருத்துவமனையில் பெண்ணின் கருப்பைக்கு வெளியே வளர்ந்த 4 மாத கருவை அறுவை சிகிச்சை செய்து அகற்றியுள்ளனர். செங்கல்பட்டை சேர்ந்த பெண் கருவுற்று இருந்த நிலையில் திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

 

சென்னை எழும்பூர் தாய்சேய் மருத்துவமனையில் ஜூலை மூன்றாம் தேதி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரை பரிசோதித்ததில் இயல்புக்கு மாறாக கருப்பைக்கு வெளியே கருவளர்ந்து இருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்தனர். இந்த கரு வெடிக்க நேர்ந்தால் தாயின் உயிருக்கு ஆபத்து நேரிடும் என்பதால் மருத்துவமனை இயக்குனர் விஜயா தலைமையிலான குழுவினர் அந்தப் பெண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்து நான்கு மாத கருவை அகற்றினர்.

Leave a Reply

Right Menu Icon