ஆல்யாவும் சஞ்சீவும் மீண்டும் சீரியலில் நடிக்க போகிறார்களா? டெஸ்ட் போட்டோஷூட்..!
ஆல்யாவும் சஞ்சீவும் விஜய் டிவியில் வந்த ராஜா ராணி சீரியல் மூலம் மக்களிடம் மிக பிரபலம் அடைந்தவர்கள். இவர்கள் நாடகத்தில் நடித்து வந்த போது இருவருக்கும் காதல் மலர்ந்துள்ளது இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போகிறார்கள் என்று கிசுகிசுக்கள் எழுந்தது.
முதலில் அதனை மறுத்து வந்த அவர்கள் அவள் பின்னர் சஞ்சீவ் அதனை ஒரு பொது மேடையில் ஒத்துக்கொண்டார். இதனைத் தொடர்ந்து ஆல்யா இஸ்லாம் மதத்திற்கு மாறி சஞ்சீவை திருமணம் செய்து கொண்டார்.
அதனைத் தொடர்ந்து ஆல்யா தன் கர்ப்ப காலத்தில் விஜய் டிவியில் நடன நிகழ்ச்சி ஒன்றிருக்கு ஜட்ஜ் ஆகவும் வந்துள்ளார். சமீபத்தில் ஆல்யாவுக்கு பெண் குழந்தை பிறந்தது. அதை அவர்கள் இணைய தளத்தில் பகிர அந்த போட்டோ வைரலானது. இதனை தொடர்ந்து மீண்டும் அவர்கள் விஜய் டிவி சீரியலில் இணைந்து நடிப்பதற்கான ஒரு டெஸ்ட் போட்டோஷூட் தயாராகிக் கொண்டு இருப்பதாக அறிவித்துள்ளார் .இதற்கு சஞ்சீவ் என்ன பப்பு சஸ்பன்சை உடச்சுட்ட என கமண்ட் செய்துள்ளார்.







