--- --:--:-- --

30 நொடிகளில் கொரொனா தொற்றை கண்டறியும் சோதனை..!

6.1

கொரொனா தொற்று இருப்பதை 30 நொடிகளில் கண்டறியும் சோதனை முறையை இந்தியாவும், இஸ்ரேலும் இணைந்து உருவாக்க உள்ளனர். இதற்காக தங்கள் நாட்டு அரசு நிபுணர் குழு விரைவில் இந்தியா வர உள்ளதாக இஸ்ரேலிய தூதரகம் தெரிவித்துள்ளது.

 

இந்த குழுவினர் இந்திய தலைமை விஞ்ஞானி விஜயராகவன் மற்றும் டிஆர்டிஓ எனப்படும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பிரிவினருடன் இணைந்து புதிய பரிசோதனை முறை குறித்து ஆய்வு செய்ய உள்ளதாக இஸ்ரேல் அதிகாரிகள் தெரிவித்தனர். நிபுணர்களுடன் வென்டிலேட்டர் உள்ளிட்ட கொரொனா சிகிச்சை சாதனங்களும் மற்ற அதி நவீன சாதனங்களும் கொண்டு வரப்பட உள்ளதாக இஸ்ரேலிய தூதரகம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Right Menu Icon