5 வது மாடியில் இருந்து தவறி விழுந்த 2 வயது குழந்தை…!
சீனாவில் ஐந்தாவது மாடியிலிருந்து தவறி விழுந்த 2 வயது சிறுவனை கீழே இருந்த நபர் பத்திரமாக பிடித்த காணொளி சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது. மாகாணத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் 2 வயது சிறுவன் வீட்டில் யாரும் இல்லாததால் ஜன்னல் வழியே வெளியேறி ஏசி சாதனத்தை பற்றியபடி இருந்தான்.
ஒரு கட்டத்தில் சோர்வடைந்து சிறுவன் பிடியை தளர்த்தி கீழே விழுந்த போது அவனுக்காக கைகளை நீட்டியபடி காத்துக்கொண்டிருந்த லிகே என்பவர் கனகச்சிதமாக சிறுவனை பிடித்தார். சிறுவனுக்கு எவ்வித காயமும் ஏற்படாத போதிலும் லீடெகாயின் கையில் கட்டு போடப்பட்டுள்ளது.






