--- --:--:-- --

கன்னியாகுமரி மாவட்டத்தில் நாயை விழுங்கிய மலைப்பாம்பு..!

4.1

கன்னியாகுமரி மாவட்டத்தில் குடியிருப்பின் அருகே நாயை விழுங்கிய மலைப் பாம்பை கண்ட பொதுமக்கள் அச்சம் அடைந்தனர். பத்மநாபபுரத்தில் தெருநாய் ஒன்று நீண்ட நேரமாக குரைத்து கொண்டு இருப்பதை கவனித்த பொதுமக்கள் அங்கு சென்று பார்த்தனர்.

 

சுமார் 12 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று நாயை இறுக்கி விழுங்க முயன்றதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் புதரில் மறைந்திருந்த மலைப்பாம்பை ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின் மீட்டனர். பின்னர் வனத்துறையிடம் ஒப்படைக்கபட்ட பாம்பு அடர்ந்த வனப்பகுதியில் விடுவிக்கப்பட்டது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon