மகாபாரதத்தை இழிவாக பேசியதாக கமல்ஹாசன் மீது தொடரப்பட்ட வழக்கு ஒத்திவைப்பு..!

மகாபாரதத்தை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக கமல்ஹாசன் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரிய வழக்கின் இறுதி விசாரணைக்காக வழக்கு 2 வாரங்களுக்கு ஒத்திவைத்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்தது. கடந்த 2017 இல் தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் நடிகர் கமலஹாசன் மகாபாரதத்தை பற்றி இழிவாக பேசியதாக வள்ளியூர் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.

 

இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி நடிகர் கமல்ஹாசன் தரப்பில் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. வள்ளியூர் நீதிமன்றம் அனுப்பிய சம்மனில் என்ன குற்றச்சாட்டு? எந்த பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு விவரங்கள் குறிப்பிடப்படவில்லை என்று நடிகர் கமல்ஹாசன் தரப்பில் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த நீதிமன்றம் வள்ளியூர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்தது. இந்த வழக்கு நேற்று விசாரித்த நீதிபதி கிருஷ்ணவள்ளி வழக்கின் இறுதி விசாரணைக்காக வழக்கை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.


Leave a Reply