கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்துள்ள டாப் ஸ்லிப் பகுதியில் வசிக்கும் பழங்குடியின மாணவிகள் ரம்யா, அர்ச்சனா 12ஆம் வகுப்பு தேர்வில் வெற்றி பெற்றதற்கு வனத்துறையினர் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்துள்ள ஆனைமலைப் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட டாப் ஸ்லிப் பகுதியில் காடர்,முதுவர், மலசர் என பழங்குடியின மக்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
அப்பகுதியை சேர்ந்த மாணவிகள் இருவரும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதியிருந்தனர். இந்நிலையில் நேற்று தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. இதில் டாப் ஸ்லிப் காலனி பகுதியை சேர்ந்த ரம்யா 311 மதிப்பெண்களும், எருமைப்பாறையைச் சேர்ந்த அர்ச்சனா 274 மதிப்பெண்களும் பெற்று வெற்றி பெற்றனர்.
12 ஆம் வகுப்பு தேர்வில் வெற்றி பெற்ற மாணவிகள் ரம்யா மற்றும் அர்ச்சனாவிற்கு வனத்துறையினர் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர். இதனால் பழங்குடியின மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியான பத்தாம் வகுப்புத்தேர்வு முடிவில் காடம்பாறை பழங் குடியினத்தை சேர்ந்த ஸ்ரீதேவி கேரளாவில் பயின்று தேர்ச்சி அடைந்தது குறிப்பிடத்தக்கது.