2014 இல் சுனந்தா மர்மமான முறையில் உயிரிழந்த வழக்கில் மீண்டும் விசாரணை தொடக்கம்..!
சுனந்தா புஷ்கர் மரணம் தொடர்பான வழக்கில் அவரது ட்விட்டர் பதிவுகளை ஆராய போலீசாருக்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னாள் மத்திய அமைச்சரும், தற்போதைய திருவனந்தபுரம் காங்கிரஸ் எம்பியுமான சசி தரூரின் மனைவியுமான சுனந்தா புஷ்கர் கடந்த 2014 ஆம் ஆண்டு ஜனவரி 17-ஆம் தேதி உயிரிழந்தார்.
டெல்லி ஐந்து நட்சத்திர ஹோட்டல் அறையில் அவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். சுனந்தா புஷ்கர் எப்படி இறந்தார் என்பது இதுவரை புதிராக இருந்து உள்ளது. இந்த வழக்கில் சசிதரூர் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய டெல்லி போலீசார் தொடர்ந்து முயன்று வருகின்றனர். அவர் மீது தற்கொலைக்கு தூண்டுதல், தாக்குதல் போன்ற பிரிவுகளில் மட்டும் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
நேற்று மீண்டும் வழக்கு மீதான விசாரணையை தொடங்கிய நிலையில் சுனந்தா புஷ்கரின் பதிவுகளையும் ஆதாரமாக சேர்க்க வேண்டும் என்று சசி தரூர் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
மரணத்திற்கு முன்பாக சுனந்தா புஷ்கர் என்ன மனநிலையில் இருந்தார் என்பதை ட்விட்டர் பதிவுகள் மூலம் அறியலாம் என்று தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் ட்விட்டர் பதிவுகளை ஆராய டெல்லி போலீசாருக்கு செப்டம்பர் 17ஆம் தேதி வரை அவகாசம் அளித்து உத்தரவிட்டுள்ளது.






