கருப்பர் கூட்டம் யூடியூப் சேனல் நிர்வாகி கைது..!
கந்தசஷ்டி பாடல் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் வீடியோ வெளியிட்டதாக கருப்பர் கூட்டம் எனும் யூடியூப் சேனல் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து இருந்த நிலையில் செந்தில்குமார் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். கருப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனலில் கந்தசஷ்டிகவசம் குறித்து வெளியான வீடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக கருப்பர் கூட்டம் யூடியூப் சேனல் மீது நிர்வாகிகள் முதல் தமிழக பாஜக சார்பில் பெருநகர காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகார் தொடர்பாக சென்னை சைபர் கிரைம் போலீசார் கருப்பர் கூட்டம் யூடியூப் சேனல் மற்றும் நிர்வாகிகள் மீது சாதி, மத, இன ரீதியான மோதல் தூண்டல் , அவதூறு பரப்புதல் உட்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கருப்பர் கூட்டம் யூடியூப் சேனல் நிர்வாகிகளில் ஒருவரான வேளச்சேரியை சேர்ந்த செந்தில் ராஜன் என்பவரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர்.







