வாட்ஸ் ஆப் இல் இளைஞர்களை காதல் வலையில் வீழ்த்தி நிர்வாண படத்தை வைத்து மிரட்டும் பெண்கள்..!
சமூக வலைதளங்கள் மூலம் ஐஐடி இளைஞர்களிடம் பழகி பணம் பறிக்கும் பெண்ணை போலீசார் தேடி வருகிறார்கள். வாட்ஸ் அப்பில் பேசி காதல் வலையில் வீழ்த்தும் பெண் மற்றொருவர் மூலம் பணம் கேட்டு மிரட்டியதால் காதல் மோசடி அம்பலத்திற்கு வந்துள்ளது.
பெங்களூரு மாநகரில் ஒயிட்பீல்டு பகுதி தனி அறையில் இருந்து வேலை பார்க்கும் பொறியியல் பட்டதாரிகள் உள்ளனர். பெற்றோரை விட்டு தனியாக வசிக்கும் இவர்களை குறிவைத்து காதல் வலையில் வீழ்த்துகிறார்கள் பெண்கள். கடந்த மாதம் இளைஞர் ஒருவருடன் வாட்ஸ் அப்பில் பேசி பழகிய ஒரு இளம்பெண் நாளடைவில் காதலாக மலர்கிறது.
திடீரென ஒருநாள் அந்த பெண் நிர்வாண வீடியோவை அனுப்பு என்றவுடன் இளைஞர் முதலில் மறுத்து விட்டார். தனது நிர்வாண வீடியோவை அனுப்புவதாக அந்த பெண் கூறியதும் வீடியோ அழைப்பில் இளைஞர் நிர்வாணமாக தோன்றினார். அடுத்த சில நிமிடங்களில் அந்த பெண்ணின் செல்போன் ஸ்விட்ச் ஆஃப் ஆகி விட்டது.
இரண்டு நாட்கள் கழித்து இளைஞரை தொடர்பு கொண்ட மற்றொரு நபர் நிர்வாண வீடியோ தன்னிடம் இருப்பதாகவும் ஐம்பதாயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும் என்று மிரட்டுகிறார். அதிர்ந்துபோன இளைஞர் பேரம் பேசி தொகையை பாதியாக குறைத்து ஆன்லைனில் பணத்தையும் அனுப்பிவிட்டார்.
மீண்டும் அந்த நபரிடம் இருந்து பணம் கேட்டு போன் வந்ததால் பெங்களூரு சைபர் கிரைம் போலீஸ் உதவியை நாடுகிறார் பொறியியல் பட்டம் பெற்ற அந்த இளைஞர். வாட்ஸ்அப் இல் பேசியது பெண்ணா அல்லது பெண் குரலில் பேசிய ஆணா என்பது போலீசாருக்கு புரியாத புதிராக உள்ளது.






