சீனாவின் ஹூவாய் நிறுவனத்தின் 5ஜி கருவிகளுக்கு பிரிட்டன் தடை..!
இந்தியா – அமெரிக்க நாடுகளை தொடர்ந்து பிரிட்டனும் சீன தொலைத்தொடர்பு நிறுவனமான ஹுவேயின் கருவிகளை பயன்படுத்த தடை விதித்துள்ளது. சீன ராணுவம் மற்றும் உலக நிறுவனங்களுடன் தொடர்பு இருப்பதால் ஹுவெய் தொலைத் தொடர்பு நிறுவனத்தின் கருவிகளை பயன்படுத்த இந்தியா தடை விதித்தது.
இதையடுத்து அமெரிக்காவும் தனது 5ஜி சேவைகளுக்கு ஹுவெய் நிறுவனத்தில் கருவிகளைப் பயன்படுத்தக் கூடாது என்று அந்நாட்டு தொலைதொடர்பு ஆணையத்திற்கு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் டிசம்பர் 31ம் தேதிக்கு பிறகு 5ஜி தொழில்நுட்பம் மேம்படுத்த நடவடிக்கையில் ஹுவேய் நிறுவனத்தின் கருவிகளைப் பயன்படுத்த பிரிட்டன் அரசு தடை விதித்துள்ளது.
ஹுவேய் நிறுவனம் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் இருப்பதால் பிரிட்டன் மொபைல் ஆபரேட்டர்கள் 2027 ஆம் ஆண்டிற்குள் தங்களது நெட்வொர்க்கிலிருந்து சீனாவின் ஹுவேய் நிறுவனம் 5ஜி கருவிகள் அனைத்தையும் அகற்ற வேண்டும் என்றும் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.






