கணவனை விவாகரத்து செய்துவிட்டு காதலன் வீடு முன் நின்று விஷம் அருந்தி பெண் தற்கொலை..!
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே காதலன் வீட்டு முன்பு விஷம் அருந்திய இளம் பெண் பரிதாபமாக உயிர் இழந்தார். ஆணையம்பட்டி பகுதியை சேர்ந்த அனிதா, கெங்கவல்லியை சேர்ந்த விக்னேஷ் இடையே காதல் இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த காதலுக்கு விக்னேஷின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அனிதாவிற்கு வேறு ஒருவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது.
இந்த நிலையில் அனிதா தன் கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்று தாய் வீட்டில் இருந்து வருகிறார் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் மீண்டும் அனிதா பேச முயற்சித்தபோது விக்னேஷ் அதனை தவிர்த்ததாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த அனிதா விக்னேஷ் வீட்டிற்கு சென்று தகராறில் ஈடுபட்டதுடன் தான் கொண்டு வந்திருந்த விஷத்தையும் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






