--- --:--:-- --

சிறுமி பாலியல் வன்கொடுமை சாத்தான்குளத்தில் மீண்டும் பதற்றம்..!

2.2

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் தாலுகாவுக்கு உட்பட்ட மெஞ்ஞானபுரம்  அருகில் உள்ள கல்விளை பகுதியை சேர்ந்தவர் சேகர் இவரது மனைவி உச்சிமாகாளி கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இவர்களுக்கு ஆண், பெண் என இரண்டு குழந்தைகள் பெண்குழந்தையான முத்தார் (7) இவர் அப்பகுதியில் விளையாடிக்கொண்டு இருந்துள்ளார்..இவருக்கு காது சரியாக கேட்காது என்று கூறப்படுகிறது.

 

உச்சிமாகளி வேலைக்கு சென்று திரும்ப வந்து பார்த்த போது சிறுமி வீட்டில் காணாதபோது அப்பகுதியில் தேட தொடங்கியுள்ளார். உறவினர்களிடம், பக்கத்து வீட்டருகிலும், கேட்ட போது பார்க்கவில்லை என கூற பின்னர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.

 

இந்த நிலையில் தான் அப் பகுதியில் உள்ள கால்வாய் ஒன்றில் சடலம் ஒன்று கிடப்பதாக காவல் நிலையத்திற்கு தகவல் கிடைக்க நேரில் சென்று பார்த்த போது அச்சடலம் சிறுமி என்று கண்டறியப்பட்டது… அச்சிறுமி உடம்பில் பல காயங்கள் இருந்ததாகவும், கூறப்படுகிறது.உடனடியாக உச்சிமாகாளிக்கு தகவல் தெரிவிக்க சம்ப இடத்தில் வந்து பார்த்த அச்சிறுமியின் பெற்றோர், உறவினர்கள் கதறி அழ அப்பகுதியே கடும் சொகத்தில் மூழ்கியது.

உடனடியாக சிறுமியின் சடலத்தை காவல்துறையினர் கைப்பற்றி பிரேத பரிசோதனை செய்வதற்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீஸ் விசாரணையில் நந்தீஸ்வரன்,மூத்தீஸ்வரன் ஆகியோரை பிடித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இவர்களுக்கு சொந்த ஊர்  தூத்துக்குடி மாணிக்கபுரம்,என்பது தெரிய வந்துள்ளது..காவல்துறையினர் பல்வேறு கோணங்களில் விசாரரித்து மேற்கொண்டு வருகின்றனர்.

 

சாத்தான்குளம் போலீசாரால் சித்ரவதை செய்யப்பட்ட ஜெயராஜ், பென்னிக்ஸ் கொலை சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி சோகத்தில் ஆழ்ந்த இச்சமயம் மேலும் ஒரு சிறுமி கொலையான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon