--- --:--:-- --

கடலுக்கு அடியில் பவளப்பாறையை உருவாக்கும் முயற்சி..!

10

புதுச்சேரியில் கடலுக்கடியில் செயற்கை பவளப்பாறைகள் உருவாக்கும் முயற்சியில் தனியார் நிறுவனம் ஈடுபட்டுள்ளது. கடலுக்கு அடியில் மணல் பரப்பு மிகுந்து காணப்படும் பகுதியில் மீன்கள் அதிகளவில் இனவிருத்தி செய்வது இல்லை. எனவே, அந்த மாதிரியான மணல் பரப்பில் செயற்கை பவளப்பாறைகளை அமைக்கும் முயற்சியில் பல நாடுகள் ஈடுபட்டு வருகின்றன.

 

பயன்படுத்தப்பட்ட போர் கப்பல், போர் விமானம் மற்றும் ராணுவ டாங்கிகள் முழுவதும் தூய்மை செய்த பின் கடலில் இறக்கி விடுகின்றனர். இவ்வாறாக கடலுக்கடியில் வைக்கப்பட்ட கப்பல் விமானம் போன்ற வாகனங்கள் மேல் நாளாக நாளாக கடல் பாசி, சங்கு மற்றும் சிப்பி அடுக்கடுக்காக படிவதால் அவைகள் பவளப்பாறையாக மாறுகின்றன.

 

இதைப்போன்று புதுச்சேரியில் ஆழ்கடல் நீச்சல் பயிற்சி அளிக்கும் டெம்பிள் அட்வென்சர் எனும் தனியார் நிறுவனம் கடலுக்கடியில் வேன், கார் போன்ற வாகனங்களை இறக்கி மீன்வளத்தை பெருக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon