காவல் நிலையத்தில் கண்ணீருடன் வனிதா அளித்த பரபரப்பு பேட்டி…!
சூர்யா தேவி என்பவர் தன்னை பற்றி அவதூறாக பேசுவதாகவும் வீட்டிற்கே வந்து தன்னை தாக்க போவதாகவும் மிரட்டுவதாக நடிகை வனிதா விஜயகுமார் போலீசில் புகார் அளித்துள்ளார். வனிதா விஜயகுமார் சமீபத்தில் பீட்டரை 3வதாக திருமணம் செய்து கொண்டார். எனவே பீட்டரின் மனைவி அது குறித்து புகார் அளித்தார்.
பீட்டர் பால் தன்னிடம் முறையாக விவாகரத்து பெறாமலேயே வனிதாவை திருமணம் செய்து கொண்டதாக அவர் போலீசில் புகார் அளித்தார். இதனை தொடர்ந்து பல கேள்விகள் சர்ச்சைக்குள்ளாகின. இந்நிலையில் சூர்யா தேவி என்பவர் வனிதாவை பற்றி அவதூறாக வீடியோ வெளியிட்டு வருவதாகவும் வனிதா காவல் நிலையத்தில் சமீபத்தில் புகார் அளித்திருந்தார்.
தற்போது மீண்டும் சூர்யா தேவி பற்றி அவர் போலீசில் புகார் அளித்துள்ளார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் என்னைப் பற்றி சூரியா யூடியூப் சேனலில் ஆபாசமாகவும் தவறாகவும் பொய்யான தகவல்களை பரப்பி வருகிறார். என் இமேஜை கெடுக்க பார்க்கிறார். பணம் சம்பாதிக்க இது போல செய்து வருகிறார்.
போரூர் போலீசில் ஏற்கனவே புகார் கொடுத்திருந்தேன். சூரியா தேவி மற்றும் படத்தயாரிப்பாளர் ரவீந்திரன் சேர்ந்து இது போன்ற செயலில் ஈடுபட்டு வருகிறார்கள் எனவும் வனிதா கூறினார். போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார். சூர்யா ,தேவேந்திரன் சிலர் அவதூறு பரப்பி வருவதாகவும் என்னுடைய மகன் மனதளவில் பாதிக்கப்படுகிறான் என்றும் எனக்கு நாற்பது வயதாகிறது.
இதனால் எனக்கு மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது எனவும் சினிமா தொடர்புடையவர்கள் என்னுடைய விஷயத்தில் தலையிட வேண்டாம் எனவும் ஆதரவில்லாத பெண்களை குறி வைத்து அந்த இரண்டு பேரும் அவதூறு பரப்புவதாக வனிதா குற்றம் காட்டியுள்ளார். இந்த விஷயத்தில் காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டு வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று நடிகை வனிதா கண்ணீர் விட்டு கூறினார்.







