--- --:--:-- --

மருத்துவமனையில் இருந்து கொரொனா நோயாளி தப்பியோட்டம்..!

10

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அரசு மருத்துவமனையில் இருந்து தப்பி வந்து சாலையோரம் அமர்ந்திருந்த கொரொனா நோயாளியை மருத்துவமனை ஊழியர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மீண்டும் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டு காரைக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 55 வயதை கடந்த நபர் அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.

 

இதையறிந்த மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் நகராட்சி அதிகாரிகள் அவரை தேடும் பணியில் ஈடுபட்ட நிலையில், அந்த நோயாளி முக்கிய வீதியான ராஜீவ் காந்தி சிலை அருகே அமர்ந்து இருந்துள்ளார். தகவலறிந்த ஊழியர்கள் 108 ஆம்புலன்ஸ் உடன் அங்கு விரைந்து நோயாளியை மீண்டும் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

 

கொரொனா நோயாளிகளை சரியான முறையில் கண்காணிக்க அதனால் இது போன்ற தவறுகள் நடப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Leave a Reply

Right Menu Icon