சசிகலாவுக்கு அதிமுகவிலும் இடமில்லை, ஆட்சியிலும் இடமில்லை..!
சிறையில் இருந்து சசிகலா வெளியே வந்தால் அதிமுகவில் கட்சி தலைமை பொறுப்பு அவருக்கு வழங்கப்படுமா என்பது தொடர்பான கேள்விக்கு அமைச்சர் ஓ எஸ் மணியன் பதிலளித்துள்ளார். தான் ஒரு மாவட்ட செயலாளர் என்றும் தலைமைதான் இது குறித்து முடிவெடுக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
அதிமுகவிலோ, ஆட்சியிலோ சசிகலாவுக்கு இடமில்லை என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சசிகலாவை கட்சியில் சேர்ப்பது குறித்து தலைமை தான் முடிவு செய்யும் என அமைச்சர் எஸ் மணியன் கருத்து தொடர்பாக கேள்விக்கு பதிலளித்த ஜெயக்குமார் இவ்வாறு தெரிவித்தார்.







