கல்லூரி மாணவியிடம் ஆபாசமாக பேசிய சென்னை மாநகராட்சி உதவி பொறியாளர் தலைமறைவு..!
கொரொனா தடுப்பு பணியில் ஈடுபட்டிருந்த கல்லூரி மாணவியுடன் காதல் வலை வீசிய சென்னை மாநகராட்சி உதவி பொறியாளர் மீது பெண் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவி அளித்த புகாரின் அடிப்படையில் மண்ணடிப்பகுதி மாநகராட்சி உதவி பொறியாளர் கமல கண்ணன் என்பவர் தன்னிடம் ஆபாசமாக பேசியதாக தெரிவித்தார்.
அது தொடர்பான ஆடியோவையும் அவர் சமர்ப்பித்திருந்தார். அந்த ஆடியோவை ஆதாரமாக வைத்து விசாரணை செய்த காவல்துறையினர் உதவி பொறியாளர் கமலக்கண்ணன் மீது பாலியல் தொல்லை கொடுத்தல், பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். அதை தொடர்ந்து கமலக் கண்ணனை கைது செய்த காவல்துறையினர் சென்றபோது அவர் தலைமறைவாக இருப்பது தெரியவந்தது.







