எம்சிஏ படிப்புக் காலம்3 ஆண்டிலிருந்து 2 ஆண்டுகளாக குறைப்பு..!
மூன்றாண்டு எம்சிஏ படிப்பை இரண்டு ஆண்டு படிப்பாக மாற்றம் செய்து அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கழகம் அறிவித்துள்ளது. எம்சிஏ என சுருக்கமாக குறிப்பிடப்படும் மாஸ்டர் ஆஃப் கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் மூன்றாண்டுகள் படிப்பாக உள்ளது.
பொதுவாக முதுநிலை பட்டப் படிப்புகள் இரண்டாண்டுகளாக உள்ள நிலையில் எஎம்சிஏ மட்டும் மூன்று ஆண்டுகள் உள்ளது. ஓராண்டு கூடுதலாக செலவிட வேண்டிய நிலை இருப்பதால் அதையும் இரண்டு ஆண்டுகளாக குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தன. இதற்க்கு பல்கலைக்கழக மானியக் குழு கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
தொடர்ந்து இதற்கு ஏற்ப புதிய பாடத்திட்டம் 2020 – 2021 ஆம் கல்வியாண்டு முதல் அமலுக்கு வரும் என்று அகில இந்திய தொழில்நுட்ப பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. பி எஸ் சி, பி சி ஏ, பி காம் உள்ளிட்டஇளங்கலை படிப்புகளில் தேர்ச்சி பெற்றவர்கள் நேரடியாக எம்சிஏ படிப்பில் சேரலாம். கடந்தாண்டில் சேர்ந்தவர்களுக்கு எந்த மாற்றமும் இருக்காது.







