கேரளாவில் கொரொனா பரவாமல் தடுக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் அடுத்தாண்டு ஜூலை மாதம் வரை நீட்டிப்பு..!
??????????????????????????????????????????????????????????
கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக விதிக்கப்பட்ட வழிகாட்டுதல்களை அடுத்த ஆண்டு ஜூலை மாதம் வரை நீட்டித்து கேரள அரசு உத்தரவிட்டுள்ளது . பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு விதிக்கப்படும் அபராதம் 10,000 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே முதன் முறையாக கேரளாவில் தான் கொரொனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது.
அம்மாநிலத்தில் நேற்று புதிதாக 225 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கும் நிலையில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 2,228 ஆக உயர்ந்தது. இந்த நிலையில் கொரொனா வைரஸ் தடுப்புக்காக வெளியிடப்பட்ட வழிகாட்டுதல்களை அடுத்த ஆண்டு ஜூலை மாதம் வரை நீட்டித்து கேரள அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி பொது இடங்களில் கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும் என்றும், மீறினால் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளிமாநிலங்களில் இருந்து கேரளாவிற்கு வருபவர்கள் கட்டாயமாக அரசின் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என்றும், மாநிலத்திற்குள் பயணிப்பதற்கு இ பாஸ் நடைமுறை தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் திருவனந்தபுரத்தில் கொரொனா தடுப்பு நடவடிக்கையாக இன்று முதல் டிரிப்பில் லாக் டவுன் என்ற பெயரில் கடும் கட்டுப்பாடுகள் அமல் படுத்தப் பட்டுள்ளன.







