கொரொனாவால் இறந்து அடக்கம் செய்யப்பட்டவரின் உடலை தோண்டி எடுத்து தரக்கூறி ராணுவ வீரர்கள் உட்பட 6 பேரை கடத்தி வைத்து மிரட்டல்..!
தென்னமெரிக்க நாடுகளில் ஒன்று. ஈகுவடார் இந்த பிரேசில் அருகே அமைந்துள்ளது. உலகின் மிகப்பெரிய அமேசான் இந்த நாட்டை சுற்றி அமைந்துள்ளது. அமேசன் காட்டில் பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகின்றனர். எனவே உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரொனா வைரஸ் அமேசான் காடுகளில் வாழும் பழங்குடியின மக்களையும் விட்டு வைக்கவில்லை.
எனவே அமேசான் காடுகளில் இருக்கும் பழங்குடியின மக்களிடையே கொரொனா வைரஸ் பரவி வருகிறது. இது போன்ற நாடுகளில் வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதால் அங்கு வாழும் பழங்குடியின மக்களும் இலக்காகி வருகின்றனர். இந்த நிலையில்தான் அங்கு வாழும் பழங்குடியின மக்களின் தலைவர் கொரொனா வைரஸ் தாக்குதல் காரணமாக உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து கொரொனாவால் உயிரிழந்த தலைவருடைய உடலை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என அந்த பகுதியில் வாழும் பழங்குடியின மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் சுகாதாரத்துறை அதிகாரிகள் அந்த நபர் கொரோனாவால் உயிரிழந்ததால் அடக்கம் செய்யும் முறைப்படி அடக்கம் செய்ய வேண்டும் எனக் கூறி அடக்கம் செய்துள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் அந்த நாட்டிலுள்ள 2 ராணுவ வீரர்கள், 2 போலீசார், 2 பொதுமக்கள் என 6 பேரை கடத்தி வைத்துள்ளனர். இதையடுத்து அவர்களை விடுதலை செய்ய என்ன காரணம் என கேட்ட போது, தங்களுடைய தலைவரின் உடலை தந்தால் மட்டுமே இவர்களை விடுதலை செய்வோம் என அந்த மக்கள் தெரிவிக்கப்பட்டதால் அங்குள்ள அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
எனவே அதன்பின் அந்த உடலை அவர்கள் தோண்டி எடுத்து ஒப்படைத்த பிறகு அவர்கள் பிணைக் கைதிகளாக பிடித்து வைத்திருந்த 6 பேரை விடுதலை செய்துள்ளனர்.







