கொரோனா பாதிப்பில் 3வது இடத்திற்கு சென்ற இந்தியா..!
உலக அளவிலான கொரோனா வைரஸ் பாதிப்பில் இந்தியா மூன்றாவது இடத்திற்கு சென்றுள்ளது. உலகம் முழுவதும் ஒரு கோடியே 15 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 5 லட்சத்து 36 ஆயிரத்துக்கும் அதிகமானோர் தொற்றினால் உயிரிழந்துவிட்டனர்.
உலகம் முழுவதும் 65 லட்சத்து 2]4 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் கொரொனா வைரஸ் பாதிப்பிலிருந்து மீண்டு உள்ளனர். இந்த நிலையில் 29 லட்சத்தை கடந்தது எண்ணிக்கையுடன் உலக அளவில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.
16 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள பிரேசில் இரண்டாவது இடத்தில் உள்ளது. கடந்த சில நாட்களாக வைரஸ் தொற்று மின்னல் வேகத்தில் பரவி வந்த நிலையில் இந்தப் பட்டியலில் இந்தியா மூன்றாவது இடத்திற்கு சென்றுள்ளது. இந்தியாவில் 69 லட்சத்து 87 ஆயிரத்துக்கும் அதிகமானவர்களுக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
நான்காவது இடத்தில் இருக்கும் ரஷ்யாவை 6 லட்சத்து 81 ஆயிரம் பேர் நோய் தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். இந்தியாவில் ஒரே நாளில் 24,850 கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா
வைரஸ் தொற்று மூன்றாவது நாளாக 20 ஆயிரத்துக்கு மேல் கண்டறியப்பட்டுள்ளது.
உத்தரபிரதேசம், ஆந்திரா, அசாம், குஜராத், மத்திய பிரதேசம், கர்நாடகா மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் ஒரே நாளில் அதிக பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. கொரோனா பாதிப்பு மகாராஷ்ட்ராவில் இரண்டு லட்சத்தையும், தமிழகத்தில் ஒரு லட்சத்து 11 ஆயிரத்தையும் கடந்திருக்கிறது.







