--- --:--:-- --

காதல் மனைவி தன்னை விட்டு பிரிந்து அவரது தாய் வீட்டிற்கு சென்றதால் கணவன் தற்கொலை..!

7

திருமணமான 2 மாதத்தில் மனைவியிடம் சண்டையிட்ட இளைஞர் வீடியோ பதிவிட்டு விட்டு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட அதிர்ச்சிகரமான சம்பவம் வேலூரில் நிகழ்ந்துள்ளது. வேலூர் கீழ்மனவுர் அம்மன் நகரை சேர்ந்த அஜய் குமாரும், அர்ச்சனா என்ற பெண்ணும் கடந்த மே மாதம் வீட்டை விட்டு வெளியேறி காதல் திருமணம் செய்து கொண்டனர்.

 

மணமுடித்த மூன்றாவது நாளே மனைவியின் மீது சந்தேகம் கொண்ட அஜய்குமார் அவருடன் சண்டையிட்டு வந்துள்ளார். இந்த நிலையில் அர்ச்சனாவிற்கு சமீபத்தில் கர்ப்பபையில் அறுவை சிகிச்சை நடந்துள்ளது.

 

இதனால் தாய் வீட்டிற்கு சென்று அர்ச்சனா ஓய்வெடுத்துக் கொண்டிருந்த நிலையில் காதல் மனைவி தன்னை விட்டு விலகிச் செல்வதாக நினைத்த அஜய்க்குமார்ஒரு வாரமாக மாமியார் வீட்டிற்கு சென்று மனைவியை தன்னுடன் வருமாறு அழைத்துள்ளார்.

 

ஆனால் அவர் வராததால் மன உளைச்சலுக்கு ஆளானார். ஜெயக்குமார் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு முன் செல்பி வீடியோவை பதிவு செய்து தன்னுடைய நெருங்கிய நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் வாட்ஸ் அப்பில் அனுப்பி உள்ளார். தனது மரணத்திற்கு மனைவியும், மாமியாரும் காரணம் என்று வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Right Menu Icon