இந்தியாவை அமெரிக்கா நேசிப்பதாக கூறிய அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்..!
இந்தியாவை அமெரிக்கா நேசிப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் 214 சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி வாழ்த்து செய்தி அனுப்பி வைத்திருந்தார். அமெரிக்காவில் சுதந்திர தினத்தன்று அதிபர் டிரம்ப் மற்றும் அமெரிக்க மக்களுக்கு தமது வாழ்த்துக்களை தெரிவிப்பதாக பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடுகளான அமெரிக்காவும், இந்தியாவும் சுதந்திரத்தை கொண்டாடுவதாக மோடி தெரிவித்திருந்தார். இந்த ட்விட்டர் பதிவிற்கு நன்றி தெரிவித்துள்ள அதிபர் டிரம்ப் மோடியை தமது நண்பர் என்று குறிப்பிட்டு இந்தியாவை அமெரிக்கா நேசிப்பதாக தெரிவித்துள்ளார்.







