அதிமுக எம்எல்ஏ அம்மன் அர்ஜுனனுக்கு கொரொனா தொற்று உறுதியானதால் அதிர்ச்சி..!
கோவை மாவட்டத்தில் நேற்று வரை 712 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 275 பேர் கொரொனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 435 பேர் கொரொனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் கோவை தெற்கு தொகுதி அதிமுக எம்எல்ஏ அம்மன் அர்ஜுனனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஜெ. அன்பழகனுக்கு கொரொனா தொற்று ஏற்பட்டு அவர் உயிரிழந்தார். நேற்று செல்லூர் ராஜுவின் மனைவிக்கு தொற்று ஏற்பட்டதை அடுத்து இன்று கோவை தெற்கு தொகுதி அதிமுக எம்எல்ஏ அம்மன் அர்ஜுனனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
மகள், மருமகனுக்கு கடந்த வாரம் கொரொனா தொற்று உறுதியான நிலையில் தற்போது அர்ஜுனனுக்கும் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. எனவே அதிமுக, திமுகவில் 4 எம்எல்ஏக்களுக்கு தொற்று உறுதியாகியுள்ளது.







