--- --:--:-- --

உரிய நேரத்தில் ஆம்புலன்ஸ் வராததால் கொரொனாவால் தனிமைப்படுத்தப்பட்ட முதியவர் பலி..!

7

செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக தனிமைப்படுத்தப்பட்டு இருந்த 60 வயது புற்று நோயாளியை மேல் சிகிச்சைக்காக அழைத்து செல்ல ஆம்புலன்ஸ் வராததால் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். மேற்கு தாம்பரம் கணபதி நகர் பகுதியை சேர்ந்த 60 வயதான முதியவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்.

 

அவருடைய உறவினர் ஒருவருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அவருக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து அவர் திருப்போரூர் அடுத்த பொன்மார் பகுதியில் அமைந்துள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் கொரோனா வார்டில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தார். சத்தான உணவு, மருத்துவ கண்காணிப்பு இல்லாததால் உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

 

அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. உடனே அருகில் இருந்தவர்கள் 108 ஆம்புலன்சை அழைத்துள்ளனர். ஆனால் ஆம்புலன்ஸ் வருவதற்கு நான்கு மணி நேரம் கால தாமதம் ஆனதால் கல்லூரி வளாகத்தில் மயக்கம் அடைந்த முதியவர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றவுடன் உயிரிழந்தார்.

 

செங்கல்பட்டில் தனிமைப்படுத்தப்பட்ட முகாமில் ஆம்புலன்ஸ் இல்லாததால் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். காலதாமதமாக மேல் சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டதே உயிரிழப்புக்கு காரணம் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Leave a Reply

Right Menu Icon