17 அங்குலம் நீளமுள்ள புழு..! வாயிலும் விஷம், வாலிலும் விஷம்..!
பிரேசில் மழைக்காடுகளில் அதிக விஷம் கொண்ட புதிய புழுவை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். சுமார் 17 அங்குலம் வரை வளரும் தன்மை கொண்ட இந்த வகை புழுக்கள் நீர்நில வாழ்விகள் என குறிப்பிட்டுள்ள அவர்கள் இதன் கரண்டி போன்ற வாயில் விஷத்தன்மை இருப்பதையும் அமெரிக்க ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இதன் மூலம் தவளைகள், சிறிய மீன்கள் உள்ளிட்ட உயிரினங்களை இந்தப் புழுக்கள் விழுங்கும் என்பதும் தெரியவந்துள்ளது. மேலும் இந்த வகை புழுக்களின் வால் பகுதியில் சிறு முள் போன்ற அமைப்பு இருப்பதாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். புழுக்கள் வாயிலும், வாலிலும் விஷத்தை வைத்திருப்பது விந்தையாக இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.







