தமிழகத்தில் இன்று 4329 பேருக்கு கொரோனா பாதிப்பு …மொத்த எண்ணிக்கை 1 லட்சத்தை கடந்தது!!
CREATOR: gd-jpeg v1.0 (using IJG JPEG v62), quality = 100
தமிழகத்தில் இன்றும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஒரே நாளில் 4 ஆயிரத்தை கடந்து 4,329 ஆக பதிவாகி மொத்த எண்ணிக்கை ஒரு லட்சத்தை கடந்துள்ளது. இன்றும் உயிரிழப்பு 64 ஆக பதிவாகி மொத்த எண்ணிக்கை 1385 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. முதல் முறையாக நேற்று பாதிப்பு எண்ணிக்கை 4 ஆயிரத்தை கடந்த நிலையில், தொடர்ந்து இன்றும் 4,329 ஆக பதிவாகி, மொத்த பாதிப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்தை கடந்து 1,02,721 ஆக உயர்ந்துள்ளது.
இதில் சென்னையில் மட்டும் இன்று 2,082 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 64,689 ஆக உயர்ந்துள்ளது.
“தமிழகத்தில் இன்று மட்டும் 64 பேர் மேலும் உயிரிழந்த நிலையில்
மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 1385 ஆகவும் உயர்ந்துள்ளது”
இன்று மட்டும் சிகிச்சை முடிந்து குணமானவர்களின் எண்ணிக்கை 2,357ஆகும். இது வரை குணமானவர்களின் எண்ணிக்கை 58,378ஆக உயர்ந்துள்ளது. என தமிழக சுகாதார துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
இதுவரை மொத்த பாதிப்பில் சென்னையில் மட்டும் பாதிக்கும் மேல் என பாதிக்கு மேல் என பதிவாகி வந்த நிலையில் இன்று சென்னையைக் காட்டிலும் மற்ற மாவட்டங்களில் பாதிப்பு எண்ணிக்கை அதிகமாகியுள்ளது. சென்னையில் பாதிப்பு 2082 என்ற நிலையில் மற்ற மாவட்டங்களில் மொத்தம் 2247 பேருக்கு கொரோனா தொற்று பதிவாகியுள்ளது.
சென்னைக்கு அடுத்து செங்கல்பட்டில் இதுவரை இல்லாத வகையில், 330 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியான நிலையில்
மாவட்ட வாரியாக இன்றைய பாதிப்பு நிலவரம் வருமாறு:
“சென்னை 2,082,
செங்கல்பட்டு 330,
மதுரை 287,
திருவள்ளூர் 172,
தி.மலை 151 ,
வேலூர் 145,
தேனி 126,
காஞ்சிபுரம் 121,
சேலம் 99,
ராணிப்பேட்டை 90,
க.குறிச்சி 85,
ராமநாதபுரம் 73,
விருதுநகர் 65,
சிவகங்கை 53,
கன்னியாகுமரி 53 என கொரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது”







