--- --:--:-- --

கொரொனா சிகிச்சைக்காக சித்த மருத்துவத்தை முயற்சி செய்து பார்க்க திட்டம் – விஜயபாஸ்கர்

11

சென்னையில் அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் கொரொனா சிகிச்சையின் ஒரு பகுதியாக சித்த மருத்துவ முறையையும் முயற்சித்து பார்க்க உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். அங்கு ஆய்வு மேற்கொண்ட பிறகு அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தனர்.

 

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அனைத்து மருத்துவமனைகளிலும் சிகிச்சையளிக்க 75 கோடி ரூபாய் சிறப்பு நிதி ஒதுக்கியுள்ளார் என விஜயபாஸ்கர் கூறியுள்ளார். எல்லா மருத்துவமனைகளிலும் 40 லிட்டர் ஆக்ஸிஜன் சிலிண்டர் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது எனவும் கூறினார்.

 

அரசு மருத்துவமனைகள், கொரொனா சிகிச்சை மையங்களில் எவ்வித கட்டுப்பாடுகள் இன்றி நோயாளிகளை அனுமதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளதாக கூறிய அமைச்சர் கொரொனா பாதித்த எம்எல்ஏக்கள் நலமாக இருக்கிறார்கள் என்று கூறினார்.

 

ஐ‌சி‌எம்‌ஆர்ரிடம் அனுமதி பெற்று சென்னை, மதுரை, திருநெல்வேலியில் பிளாஸ்மா சிகிச்சை மையத்தின் மூலமாக பிளாஸ்மாவை பெறுவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

Leave a Reply

Right Menu Icon