--- --:--:-- --

வினோத உருவம் கொண்ட தக்காளி… கொரொனா தக்காளி எனக்கூறி வாங்க மறுக்கும் மக்கள்..!

10

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே தரமற்ற விதையால் வினோத உருவத்துடன் தக்காளிகள் விளைந்துள்ளன. இரண்டு ஏக்கரில் 10 லட்சம் ரூபாய் செலவில் பயிரிட்ட விவசாயி ராஜப்பா தரமற்ற விதைகளை பூனை முகத்துடன் தக்காளி விளைய காரணம் என தோட்டக்கலைத் துறையினர் கூறுவதாக தெரிவிக்கிறார்.

 

20 கிலோ கூடை ஆயிரம் ரூபாய் வரை விற்கப்படும் நிலையில் தக்காளி நன்றாக விளைந்து இருந்தால் தினமும் 4 ஆயிரம் ரூபாய் வீதம் 60 லட்சம் ரூபாய் வருவாய் கிடைக்கும் என்று கூறும் ராஜப்பா தனது தோட்ட தக்காளியை அனைவரும் கொரொனா தக்காளி எனக் கிண்டல் செய்வதாக வேதனை தெரிவிக்கிறார்.

Leave a Reply

Right Menu Icon