மராட்டிய மாநிலத்தில் 24 மணி நேரத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரொனா தொற்று உறுதியானதால் அதிர்ச்சி..!
மராட்டிய மாநிலத்தில் 24 மணி நேரத்தில் 5,537 பேருக்கு கொரொனா தொற்று ஏற்பட்டு இருப்பதால் அந்த மாநில அரசு செய்வதறியாமல் தவித்து வருகிறது. மராட்டிய மாநிலத்தில் நாள் ஒன்றுக்கு குறைந்தது 4 ஆயிரம் பேருக்கு தொற்று ஏற்பட்டு வருகிறது. மாநிலம் முழுவதும் இதுவரை ஒரு லட்சத்து 80 ஆயிரத்து 298 பேர் கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் 8 ஆயிரத்து 53 பேர் உயிரிழந்துவிட்டனர். வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் மராட்டியத்தில் மட்டும் 4 ஆயிரத்து 600 போலீசாருக்கு கொரொனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மற்ற போலீசார் மிகுந்த அச்சத்துடன் பணிக்கு சென்று வருகின்றனர். இந்திய நகரங்களில் மும்பை தொற்று அதிகம் கொண்ட நகரமாக நீடிக்கிறது.
அங்கு 79 ஆயிரத்து 145 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று மட்டும் ஆயிரத்து 498 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 4,631 பேர் உயிரிழந்துவிட்டனர். மறுபுறத்தில் மராட்டிய மாநிலத்தில் இதுவரை 93 ஆயிரத்து 154 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.





