ராஜீவ்காந்தி பவுண்டேஷன் சீன தூதரகத்திடம் இருந்து நன்கொடை பெற்ற விவகாரம்! காங்கிரசுக்கும், சீனாவுக்கும் என்ன உறவு ?
ராஜீவ்காந்தி பவுண்டேஷன் அமைப்பு சீன தூதரகத்திடம் இருந்து நன்கொடை பெற்ற விவகாரமும், பிரதமர் நிவாரண நிதியில் இருந்து பணம் பெற்ற விவகாரமும் அரசியல் ரீதியாக பெரும் அனலை கிளப்பி விட்டுள்ளது. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தன் பிள்ளைகள் நலனுக்காக நாட்டை கொள்ளையடித்ததாக மத்திய அமைச்சரும், அமைதி தொகுதி எம்பியுமான ஸ்மிருதி இரானி புகார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சிக்கும், சீனகம்யூனிஸ்ட் கட்சிக்கும் இடையிலான உறவு என்ன என்று கேள்வி எழுப்பியுள்ள, பாஜக தலைவர் நட்டா இருவருக்குமிடையிலான ஒப்பந்தம் என்ன என்பதை 130 கோடி மக்களும் அறிய விரும்புவதாக கூறியுள்ளார். இந்த குற்றச்சாட்டுகளுக்கு முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரம் பதிலளித்துள்ளார்.
மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் பாஜக முடிச்சுப் போடுகிறது என்று குற்றம் சாட்டியுள்ளார். சீன ஆக்கிரமிப்பை எப்படி, எப்போது, மோடி அரசை அகற்ற போகிறது என்ற கேள்விக்கு ஏன் இதுவரை பதில் இல்லை என்றும் சாடுகிறார்.

டுவிட்டரில் பதிவிட்டு இருக்கும் சிதம்பரம் 2005 ஆம் ஆண்டில் ராஜீவ்காந்தி அறக்கட்டளை அந்தமான் தீவுகளில் சுனாமி நிவாரணப் பணிகளுக்காக பிரதமர் நிவாரண நிதியில் இருந்து 20 லட்சம் ரூபாய் பெற்றது உண்மைதான் என்றும் ஒவ்வொரு ரூபாயும் நிவாரணப் பணிகளுக்கு செலவிடப்பட்டு கணக்கு சமர்ப்பிக்க பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் இதில் என்ன தவறு என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கிடையில் காங்கிரஸ் மூத்த தலைவர் கமல்நாத் மத்திய வர்த்தக அமைச்சராக இருந்தபோது 250 சீன பொருட்களுக்கு வரியை குறைத்து சலுகை காட்டியதாக பாஜக எம்பி வீட்டில் ஷர்மா குற்றம்சாட்டியுள்ளார். சீன பொருட்களுக்கு 40 முதல் 250 சதவீதம் வரை வரியை குறைத்து அதன் மூலம் இந்தியாவில் சிறு தொழில்கள் பாதிக்கப்பட்டதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.






