--- --:--:-- --

முதல்வர் தலைமையில் இன்று ஆலோசனை! ஊரடங்கு அறிவிப்பா?

3

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஆலோசனை வழங்க 19 மருத்துவர்கள் கொண்ட நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது. சிகிச்சை நெறிமுறைகளை வகுப்பதோடு தமிழ்நாட்டில் செயற்படுத்துவதற்கான பரிந்துரைகளை இந்த குழு வழங்கி வருகிறது. ஏற்கனவே ஐந்து முறை முதலமைச்சரை இந்த குழு சந்தித்து அப்போதைய நிலவரம் மற்றும் கொரொனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதித்தது.

 

இந்த நிலையில் மருத்துவ வல்லுனர் குழுவினருடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்துகிறார். சென்னை தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் காலை 10 மணிக்கு இந்த கூட்டம் நடைபெறுகிறது. மருத்துவ நிபுணர் குழுவை சேர்ந்த சிலருடன் காணொளி வழியாக எடப்பாடி பழனிசாமி கருத்துகளை கேட்டறிகிறார்.

 

கொரோனா நோய்த் தொற்று அதிகம் உள்ள சென்னை மற்றும் அதனுடன் இணைந்த பகுதிகள் செங்கல்பட்டு காஞ்சிபுரம், திருவள்ளூர், மதுரை, தேனி உள்ளிட்ட சில மாவட்டங்களில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் நாளையுடன் முடிவுக்கு வருகிறது.

 

தமிழகத்தில் கட்டுப்பாடுகளை நீட்டிப்பது அல்லது தளர்வுகள் அளிப்பது குறித்து ஆலோசனை கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த முறை நடைபெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி சென்னை உட்பட நான்கு மாவட்டங்களில் நாளை வரை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon