--- --:--:-- --
22

கோவையில் கொரோனா வைரசின் தாக்கம்நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது.கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் மாவட்ட ஆட்சியர் ராசாமணி பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.மாநில,மாவட்ட எல்லைகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.உரிய இ பாஸ் இருந்தாலும் தீவிர சோதனைக்கு பின்னரே கோவைக்குள் அனுமதிக்கப்பட்டு வருகிறது.

 

ஊராட்சி,பேரூராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள தெருக்கள் தோறும் மாஸ்க் அணிவதன் அவசியம்,கொரோனா வைரசின் தீவிரம் குறித்து ஒலிபெருக்கிகள் மூலம் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.உள்ளாட்சிப்பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.விதிகளை மீறும் மக்களுக்கு அபராதமும்,தொழில் நிறுவனங்களுக்கு தேவைப்பட்டால் சீல் வைக்கப்பட்டும் வருகிறது.

இந்த நிலையில் கோவை மாவட்டம் சூலூரை அடுத்துள்ள கணியூர் ஊராட்சிக்குட்பட்ட கொள்ளுப்பாளையம் பகுதியில் 31 வயதுள்ள இளைஞர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

இளைஞருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது குறித்து அவரது டிராவல் ஹிஸ்டரியில் சோதனையிட்டதில் கடந்த வாரத்தில் தொற்று கண்டறியப்பட்டுள்ள இளைஞரின் தம்பிக்கு வேலூர் மருத்துவமனையில் குழந்தை பிறந்துள்ளது.குழந்தையை பார்ப்பதற்காக வேலூர் சென்ற இளைஞருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

 

இதனால் அப்பகுதி முழுவதும் கணியூர் ஊராட்சி நிர்வாகத்தால் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.மேலும்,இளைஞருடன் தொடர்பிலிருந்த அனைவரையும் சுய தனிமைப்படுத்துதலில் இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon