--- --:--:-- --

காவல் நிலையம் முன்பு மண்ணெண்ணை ஊற்றி தீக்குளித்த பெண் மரணம்!

13

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு வந்த பெண் காவல் நிலையம் முன் தன் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பாண்டி என்பவர் திருட்டு வழக்கில் சிறையில் உள்ளார்.

 

இவரது மனைவி செல்வி திருட்டு நகை ஒன்றை வாங்கி விற்ற வழக்கில் நகையை உரியவரிடம் போலீஸ் மூலம் ஒப்படைத்த நிலையில் கடந்த 7ஆம் தேதி விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு வந்தார். அப்போது அவர் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெயை தனது உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.

 

அவரை மீட்ட போலீசார் புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.

Leave a Reply

Right Menu Icon