--- --:--:-- --

கோவை எம்.ஜி.ஆர் மார்க்கெட்டில் 3 வியாபாரிகளுக்கு கொரோனா !மார்க்கெட்டிற்கு சீல் வைப்பு !!!

11.2

கோவை எம்.ஜி.ஆர் மார்க்கெட்டை சேர்ந்த 3 வியாபாரிகளுக்கும், அண்ணா மார்க்கெட்டை சேர்ந்த ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் எம்.ஜி.ஆர் மார்க்கெட்டில் உள்ள 200 வியாபாரிகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. கொரோனா பரவலை தடுக்கும் வகையில் எம்.ஜி.ஆர் மார்க்கெட்டிற்கு மாநகராட்சி அதிகாரிகள் அதிரடியாக சீல் வைத்தனர்.

 

மேலும்,மார்க்கெட்டிற்கு அருகே உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா என்ற தனியார் வாகன நிறுத்துமிடத்திற்கும் அதிகாரிகள் சீல் வைத்தனர்.காய்கறிகளை எடுத்து செல்வதற்காக வியாபாரிகளுக்கு நாளை மதியம் 12 மணி வரை கெடு அளிக்கப்பட்டுள்ளது.

மருத்துவ பரிசோதனையில் கொரோனா நெகட்டிவ் வரும் வியாபாரிகளுக்கு மட்டும் ஜி.சி.டி கல்லூரி வளாகம் மற்றும் எரு கம்பெனி பகுதியில் மாற்று இடம் வழங்கப்படுமென மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Right Menu Icon