--- --:--:-- --

கொரொனாவால் உயிரிழந்தவரின் உடலை வீசி சென்றதாக வெளியான வீடியோ உண்மை அல்ல!

1.1

திருச்சியில் கொரோனாவால் உயிரிழந்த 72 வயது முதியவரின் உடலை உரிய முறையில் அடக்கம் செய்யாமல் வீசி சென்றதாக வெளியான தகவலை அவரது மகன்கள் மறுத்துள்ளனர். தங்கள் தந்தையின் மரணத்தை கொச்சைப்படுத்த வேண்டாம் என்று அவர்கள் கேட்டுக்கொண்டனர்.

 

கடலூர் மாவட்டத்தை சேர்ந்த 75 வயது முதியவர் ஒருவர் கொரொனா தொற்று உறுதியாகி திருச்சியில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனை அடுத்து திருச்சி கோட்டைமேட்டில் உடல் அடக்கம் செய்ய உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

 

அங்கு அரசு ஊழியர்கள் முன்னிலையில் பொக்லைன் எந்திரம் மூலம் பள்ளம் தோண்டப்பட்டு உரிய மருந்துகள் தெளிக்கப்பட்ட உடல் அடக்கம் செய்யப்பட்டது. அப்போது எடுக்கப்பட்ட வீடியோவில் ஒரு பகுதியை மட்டும் வாட்ஸ் அப்பில் வெளியிட்ட சிலர் ஆம்புலன்சில் கொண்டுவரப்பட்டு உடல் வீசி செல்லப்பட்டதாக செய்தி வெளியிட்டு விட்டனர்.

 

இதை உயிரிழந்தவரின் மகன்களை மறுத்துள்ளனர் .வாட்ஸ் அப்பில் தவறான தகவல் வெளியானதாக அதை உறுதிப்படுத்தாமல் சிறு செய்தியாக வெளியிட்டு விட்டதாகவும் தெரிவித்தனர். மேலும் உரிய முறையிலேயே தங்கள் தந்தையின் உடல் அடக்கம் செய்யப் பட்டுள்ளதாகவும் அவரது இழப்பை கொச்சைப்படுத்த வேண்டாம் என்றும் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

 

இதனால் கொரொனாவால் இறந்தவர் உடலை சரியான முறையில் அரசு ஊழியர்கள் கண்டதாகவும் இந்த விவகாரத்தில் மருத்துவமனையின் பெயருக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் சிலர் உள்நோக்கத்தோடு தவறான தகவல்களை பரப்புவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

 

இதுகுறித்து திருச்சி மாவட்ட ஆட்சியரிடமும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடமும் மருத்துவமனை நிர்வாகத்தின் சார்பில் மனு ஒன்றும் அளிக்கப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon