--- --:--:-- --

இந்தியாவை சேர்ந்த கணவன் மனைவியை கத்தியால் குத்தி கொன்ற பாகிஸ்தானியர்!

8.2

துபாயில் வீட்டின் கதவை உடைத்து புகுந்த ஒருவன் அங்கு வசித்த இந்திய தம்பதியரை குத்திக் கொலை செய்தான். வீட்டில் இருந்த பொருட்களையும் அவன் கொள்ளை அடித்து சென்றான். குற்றவாளி பாகிஸ்தானை சேர்ந்தவர் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

 

40 வயதான கிரன் ஆதித்யா மற்றும் அவருடைய மனைவி விதி ஆதித்யா ஆகியோர் தங்கள் வீட்டில் திருடன் புகுந்ததை அறிந்த தடுக்க முயன்ற போது கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டனர். அவர்களது மகனும் கத்தியால் குத்தப்பட்டு படுகாயம் அடைந்தான். திருடன் தப்பியதும் அவர் தட்டுத் தடுமாறிய படி போலீசாருக்கு தகவல் அளித்தார்.

 

போலீசார் உடனடியாக விரைந்து வந்து அந்த பெண்ணை மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்து சடலங்களையும் கைப்பற்றினர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon