இறுதியாண்டு செமெஸ்டர் தேர்வுகளை ரத்து செய்ய யுஜிசி பரிந்துரை!
பல்கலைக்கழகங்களின் இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகளை த்து செய்யுமாறு யுஜிசி நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளது. பல்கலைக்கழகங்களில் இறுதியாண்டு மாணவர்களுக்கு தேர்வுகளை நடத்துவதா? வேண்டாமா என்பது சம்பந்தமாக பரிந்துரை வழங்க ஒரு குழு அமைக்கப்பட்டு இருந்தது.
ஹரியானா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் தலைமையில் இந்த குழு அமைக்கப்பட்டு இருந்த நிலையில் அந்த குழு தற்போது முக்கிய பரிந்துரைகளை வழங்கி யுள்ளனர். அதில் மிக முக்கியமானது தற்போதைய சூழலில் இறுதியாண்டு தேர்வு நடத்தினால் அது மாணவர்களுக்கு சுகாதார பிரச்சனையை ஏற்படுத்தி விடும் என்று அச்சத்தை அந்த குழு தெரிவித்துள்ளது.
எனவே மாணவர்கள் அதற்கு முன்பே அவர் தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் இறுதியாண்டு தேர்வில் அவர்களைத் தேர்ச்சி செய்ய வைக்கும் நடைமுறைகளை மத்திய அரசு மேற்கொள்ளலாம் என்ற ஒரு பரிந்துரையை வழங்கியுள்ளனர். இதை தவிர இந்த முறையை ஏற்றுக் கொள்வதை மாணவர்களை முடிவு செய்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.






