கோவையில் கஞ்சா விற்ற வாலிபர் கைது. 1.1 கிலோ கஞ்சா பறிமுதல் !!!
கோவை அருகே சரவணம்பட்டி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட துடியலூர் ரயில் நிலையம் அருகே கஞ்சா விற்பனை நடைபெறுவதாக தகவல் கிடைத்தன. இதனை தொடர்ந்து சரவணம்பட்டி போலீசார் அங்கு ரகசியமாக சென்று பார்வையிட்டனர். அப்பொழுது,அப்பகுதியில் இளைஞர் ஒருவர் கஞ்சா விற்பனை செய்வது தெரிய வந்த நிலையில் அவரை கையும் களவுமாக பிடித்தனர்.
காவல் துறையினர் நடத்திய விசாரணையில் அவர் கன்னியாகுமரியைச் சேர்ந்தவர் லிலியன் ஜெப் ( வயது 21 )என்பதும் தெரிய வந்தது. தொடர்ந்து பல்வேறு இடங்களில் கஞ்சா விற்றது தெரிய வந்திருக்கின்றன. அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை செய்து அவரிடமிருந்து 1.1 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.அவன் மீது வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் சிறையில் அடைத்தனர்.

கோவையில் ரயில் நிலையம்,விமான நிலையம்,பேருந்து நிலையம் அருகே இதுபோன்று கஞ்சா விற்பனை செய்யும் இளைஞர்கள் போலீஸின் கண்காணிப்பில் தொடர்ந்து சிக்கி சிறையில் அடைக்கப்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.






