சிறுமிக்கு காதல் கடிதம் கொடுத்த 66 வயது ” வில்லங்க ” முதியவர் கைது !!!
கோவை போத்தனூர் அருகே எனக்கு உன்னை பிடித்திருக்கிறது உனக்கு ஓகே வா என்று சிறுமிக்கு காதல் கடிதம் கொடுத்த வயதான நபர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவையை அடுத்த போத்தனூர் அருகே பஜனை கோயில் தெருவில் வசிப்பவன் முகமது பீர் பாஷா ( வயது 66 ). இதே பகுதியில் வசித்து வரும் 16 வயது சிறுமியை தவறான கண்ணோட்டத்தில் பார்த்து வந்துள்ளான். உடனே அந்த சிறுமியிடம் எனக்கு உன்னை பிடித்திருக்கிறது உனக்கு ஓகே வா என்று கேட்டு கடிதம் ஒன்றை கொடுத்துள்ளான். இதனை அச்சிறுமி அவரின் தாயாரிடம் கொடுத்துள்ளார்.

இதனை தொடர்ந்து சம்பந்தபட்ட நபரின் குடும்பத்தாரிடம் அச்சிறுமியின் வீட்டார் தெரிவித்தபோது அந்த முதியவரை கண்டித்துள்ளனர்.ஆனால்,அதனை பொருட்படுத்தாத முதியவர் மீண்டும் அந்த சிறுமியை மிரட்டி உள்ளார். இதனைத்தொடர்ந்து பயந்த சிறுமி வீட்டை விட்டு வெளியே வராமல் இருந்துள்ளார்.
இதுதொடர்பாக அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பெற்றோர் தரப்பில் புகார் கொடுக்கப்பட்டது.புகாரை விசாரித்த அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் முதியவரை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.இச்சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






