ரேஷன் கடை ஊழியர்கள் மூலம் பொது மக்களின் வீட்டிற்கே சென்று ரூ.1000 நிவாரணம்!
சென்னையில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு இன்று முதல் வீடு வீடாக ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படுகிறது. கொரொனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் சென்னை பெருநகர காவல் துறைக்கு எல்லைக்கு உட்பட்ட பகுதிகளிலும் திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் சில இடங்களிலும் கடந்த 19ஆம் தேதி முதல் முழு பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த பகுதிகளில் வசிக்கும் குடும்ப அட்டைதாரர்களுக்கு தல ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்குவதற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே உத்தரவிட்டுள்ளார். இதன்படி இன்று முதல் ரேஷன் கடை ஊழியர்கள் மூலம் வீடுகள் தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. இதற்காக 218 கோடியே 35 லட்சத்து 97 ஆயிரம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
வரும் 26-ஆம் தேதி வரை பண விநியோகம் நடைபெறுவதால் ஐந்து நாட்களுக்கு ரேஷன் கடைகள் இயங்காது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.






