--- --:--:-- --

கொரோனாபரவலை தடுக்க புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ள புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி!

2

புதுச்சேரியில் மதுக் கடைகள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே திறந்திருக்கும் என்று அறிவித்துள்ள முதலமைச்சர் நாராயணசாமி முக கவசம் அணியாமல் சென்றால் 2
00 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். புதுச்சேரியில் கொரொனா தடுப்பு நடவடிக்கையாக புதிய கட்டுப்பாடுகளை முதலமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.

 

அதன்படி கடைகள், மதுக் கடைகள் காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே செயல்படும். பெட்ரோல் பங்குகள் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே இயங்க அனுமதிக்கப் பட்டுள்ளது. உணவு விடுதிகளில் 2 மணி வரை மட்டுமே அமர்ந்து சாப்பிட அனுமதிக்கப்படும். அதன் பிறகு இரவு 8 மணி வரை இயங்கலாம்.

 

ஆனால் பார்சல் மட்டுமே வழங்கலாம். முக கவசம் அணியாமல் சென்றால் 200 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலும், தொழிற்சாலைகள் வழக்கம் போல் செயல்படலாம் என்றும் கடற்கரைக்கு செல்ல அடுத்த பத்து நாட்களுக்கு அனுமதி இல்லை என்றும் முதலமைச்சரின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon